விளைபொருட்களை நாமே சந்தைப்படுத்தலாம்
சவுடு மண்ணில், சாத்துக்குடி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை, முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், சாத்துக்குடி பழ மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.இந்த பழ மரங்கள், செம்மண், கரிசல் மண்ணுக்கு நன்றாக விளைச்சலை கொடுக்கும். பிற மண்ணில், மகசூல் ஈட்டுவதிலும் சிரமமாக இருக்கும்.நம்மூர் சவுடு மண்ணுக்கு, சாத்துக்குடி பழ மரங்கள் அருமையாக வளர்கின்றன. இயற்கை உரங்கள் மற்றும் நீர் பாசனத்தை முறையாக கையாண்டால், கூடுதல் மகசூல் பெற முடியும்.இந்த பழங்கள், சீசனில் அதிகமான மகசூல் கொடுக்கிறது. எங்கள் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பொருட்களை நாங்களே சந்தைப்படுத்துவதால் கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. மாதவி, 97910 82317.