உள்ளூர் செய்திகள்

பூச்சிகளை கட்டுப்படுத்தும் மஞ்சள், நீலநிறங்கள்

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இலை பேன்களை கண்காணிக்க ஏக்கருக்கு 12 முதல் 15 எண்ணிக்கையில் மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்தலாம். பசுமை குடில், நிழல் வலை கூடார பயிர்களுக்கு ஐந்து மீட்டருக்கு ஒரு மஞ்சள் ஒட்டு பொறியை செடிகளின் கிடைமட்ட அளவில் காற்று வீசும் திசைக்கு எதிராக கட்ட வேண்டும். இதை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். சிறிய செவ்வக வடிவ அட்டை, பிளாஸ்டிக் அல்லது இரும்பு பெட்டி போன்றவற்றில் மஞ்சள் நிற பெயின்ட் பூச வேண்டும். அதன் மேல் கிரீஸ் அல்லது ஆமணக்கு எண்ணெய்யுடன் ஏதேனும் மருந்து கலந்து வயலில் வைத்தால் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கும்.நீலநிற ஒட்டு பொறிகள் 'ட்ரிப்ஸ்' எனப்படும் இலை பேன்களை கவர்ந்து அழிக்கும். ஒட்டுப்பொறிகளை நிலத்தில் நிறுவிய பின் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை தெளித்தால் இலை பேன் இடம் மாறி தாவும் போது ஒட்டுப்பொறியில் சிக்கி இறந்து விடும்.பூண்டு அல்லது சின்ன வெங்காய சாற்றின் மூலம் அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் பட்டாம்பூச்சி வகை பூச்சி களையும் கட்டுப்படுத்தலாம். இதில் இருந்து வரும் வாசம் பூச்சிகளால் தாங்கமுடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !