மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
பெங்களூரு, : பெங்களூரில் 100 கி.மீ., துாரத்திற்கு சிக்னல் இல்லாத சாலைகள் அமைக்க, கர்நாடக அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.பெங்களூரு நகரம், இன்று உலக அளவில் வேகமாக உயர்ந்துள்ளது. நகரில் 1.50 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 10 நிமிடங்களில் சென்றடைய கூடிய இடத்திற்கு கூட செல்வதற்கு 45 நிமிடங்கள் ஆகிறது. சுரங்கப்பாதை
பெங்களூரில் நிலவும் போக்குவரத்து பிரச்னை அரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மெட்ரோ ரயில் சேவை துவங்கியும், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சராக இருக்கும், துணை முதல்வர் சிவகுமார், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதைகள், சிக்னல் இல்லாத சாலைகளை அமைக்கலாம் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தார். காலக்கெடு
இதையடுத்து கே.ஆர்., புரம்- - கோரகுன்டேபாளையா இடையில் 23 கி.மீ.,; ஆனேபாளையா -- சில்க் போர்டு இடையில் 5.5 கி.மீ.,; மாரேனஹள்ளி -- கனகபுரா ரோடு, தலகட்டபுரா -- நைஸ் ரோடு இடையில் தலா 10 கி.மீ., மினர்வா சதுக்கம்- - கப்பன் பார்க் இடையில் 2.7 கி.மீ., உட்பட 100 கி.மீ., துாரத்திற்கு சிக்னல் இல்லா சாலைகள் அமைப்பதற்காக பெங்களூரில் 17 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த திட்டம் தொடர்பாக, சமீபத்தில் நடந்த பெங்களூரு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.ஆனால் திட்டத்தை முடிப்பதற்காக இன்னும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. சிக்னல் இல்லா சாலைகள் அமைப்பது தொடர்பாக விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 hour(s) ago | 1