மேலும் செய்திகள்
'அடுத்த முறையும் நானே முதல்வர்!'
13-Mar-2025
பெங்களூரு: கே.பி.எஸ்.சி.,யில் ஊழல் நடந்ததாக, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா ஒப்புக்கொண்டுள்ளார்.கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளால், தேர்வர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவது பற்றி, சட்டசபையில் பிரச்னை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று பேசினார்.இதற்கு முதல்வர் சித்தராமையா அளித்த பதில்:எதிர்க்கட்சித் தலைவர் அசோக், கே.பி.எஸ்.சி.,யை நலிவடைந்த நிறுவனம் என்று கூறி உள்ளார். கே.பி.எஸ்.சி., சரியாக செயல்பட வேண்டும் என்று, இந்த அவையின் உறுப்பினர்கள் கவலை தெரிவிப்பது சரியான விஷயம்.எங்கள் அரசின் கவலையும் அது தான். அதிகாரிகள் தேர்வு செயல்முறைகளை சரியாக செய்ய வேண்டும். திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகள் மாநில நிர்வாக சேவைக்கு வர வேண்டும் என்பது எங்கள் ஆசை.மைசூரு மன்னர்கள் காலத்தில், மைசூரு சிவில் சர்வீஸ் நாட்டில் மதிப்புமிக்க சேவையாக இருந்தது. நால்வாடி கிருஷ்ணரா உடையார் உள்ளிட்டோர் நல்ல சேவை செய்துள்ளனர்.கே.பி.எஸ்.சி.,யும் அதன் கண்ணியத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும். ஆணைய தேர்வுகளை சுதந்திரமாக, நேர்மையாக நடத்துவதை உறுதி செய்ய 2013ல் ஒரு குழு அமைத்தோம்.மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கவுசிக் முகர்ஜி, சஞ்சீவ் குமார் அந்த குழுவில் இருந்தனர். அவர்கள் அளித்த பரிந்துரைகளை நாங்கள் செயல்படுத்தினோம்.வினாத்தாள்களில் முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, பின் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்படுவதால் தவறு நடப்பதாக மொழி பெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர். இதில் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்.வினாத்தாள்களை உயர்தரத்தில் தயாரிக்க வேண்டும். கே.பி.எஸ்.சி.,யை சரியான பாதையில் கொண்டு செல்ல, அரசு எல்லா முயற்சியும் செய்கிறது. பல திருத்தங்களை செய்யவும் திட்டம் வைத்திருக்கிறோம்.கே.பி.எஸ்.சி., உறுப்பினர் எண்ணிக்கையை 14ல் இருந்து 16ஆக உயர்த்தியது, பா.ஜ., அரசு தான். கே.பி.எஸ்.சி.,யில் இருந்து ஊழல் வெளியேற்றப்பட வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மொழிபெயர்ப்பால் பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
13-Mar-2025