உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐ.ஜி., ரூபா அதிரடி இடமாற்றம்

ஐ.ஜி., ரூபா அதிரடி இடமாற்றம்

பெங்களூரு: சக பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தவர் ரூபா. இதே துறையில் டி.ஜ.ஜி.,யாக பணியாற்றியவர் வர்த்திகா கட்டியார். 'என் அனுமதி இல்லாமல் நான் பயன்படுத்தும் அறையை திறந்து, போலீஸ்காரர்கள் மஞ்சுநாத், மல்லிகார்ஜுன் ஆகியோர், பிற துறைகளின் கோப்புகளை வைத்து, படம் எடுத்தனர். ரூபா கூறியதன்படியே இப்படி செய்தனர்' என, தலைமை செயலர் ஷாலினியிடம், கடந்த மாதம் 20ம் தேதி வர்த்திகா கட்டியார் புகார் செய்தார். இந்த புகார் டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 3ம் தேதி வர்த்திகா கட்டியார் இடமாற்றம் செய்யப்பட்டு, ஊர் காவல் படையின் கூடுதல் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டார். தன்னை விட உயர் அதிகாரியான ரூபா மீது புகார் செய்ததால், வர்த்திகா கட்டியார் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று போலீஸ் துறையில் பேச்சு அடிபட ஆரம்பித்தது.இதைத் தொடர்ந்து, ரூபாவையும் அரசு நேற்று இடமாற்றம் செய்தது. கர்நாடக பட்டு சந்தைப்படுத்துதல் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kovandakurichy Govindaraj
மார் 11, 2025 00:27

ரூபா ஒரு விளம்பர பிரியை. சின்னம்மா சிறையில் இருந்த போது தான் பிரபலமாக அவர் மீது குற்றம் சுமத்தி பரபரப்பு ஏற்படுத்தியவர். அரசுக்கு உண்மை தெரிந்தவுடன் அப்போதே உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்


sankar
மார் 08, 2025 12:16

கால்வைக்குற இடமெல்லாம் கண்ணிவெடியா


சமீபத்திய செய்தி