உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஈஷா பவுண்டேஷனுக்கு சிறப்பு பஸ்; பயணியரிடம் அமோக வரவேற்பு

ஈஷா பவுண்டேஷனுக்கு சிறப்பு பஸ்; பயணியரிடம் அமோக வரவேற்பு

பெங்களூரு: சுற்றுலா பயணியரின் வசதிக்காக, ஈஷா பவுண்டேஷனுக்கு சிறப்பு சுற்றுலா பஸ்களை இயக்கியதால், பி.எம்.டி.சி.,க்கு அதிக வருவாய் கிடைக்கிறது.சிக்கபல்லாபூரின், ஈஷா பவுண்டேஷனுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவர்களின் வசதிக்காக, 2024 மார்ச் 8ம் தேதி சிறப்பு சுற்றுலா 'ஏசி' பஸ்களை பி.எம்.டி.சி., இயக்க துவங்கியது. ஓராண்டில் 50,000க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பி.எம்.டி.சி.,க்கு 2.55 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, ஈஷா பவுண்டேஷனுக்கு தினமும் 'ஏசி' சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது.மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, போக நந்தீஸ்வரர் கோவில், கனிவே பசவண்ணா கோவில், விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம் மற்றும் அவரது சமாதி, ரங்கஸ்தல ரங்கநாத சுவாமி கோவிலை தரிசனம் செய்து விட்டு, ஈஷா பவுண்டேஷனை சென்றடையும்.இங்கு சுற்றி பார்த்த பின், அதே நாள் இரவு 9:30 மணிக்கு பெங்களூருக்கு திரும்பும். இந்த சுற்றுலா பேக்கேஜுக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,271 பஸ்களில் 50,128 பேர் பயணித்ததில், 2.55 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. பயணியரிடம் சுற்றுலா பேக்கேஜுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை