உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கொலை விசாரணை குழுவிலிருந்து விடுவிக்குமாறு ஏ.எஸ்.பி., கடிதம்

 கொலை விசாரணை குழுவிலிருந்து விடுவிக்குமாறு ஏ.எஸ்.பி., கடிதம்

பெங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி., விசாரணை குழுவிலிருந்து, தன்னை விடுவிக்குமாறு ஏ.எஸ்.பி., வெங்கடேஷ் பிரசன்னா மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தட்சிண கன்னடா வின் தர்மஸ்தலா உஜ்ரேயில், 2012ம் ஆண்டு கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணை சரியில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, மறுவிசாரணை செய்ய வேண்டும் என, கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசு, போலீஸ் ஐ.ஜி., சசிகுமார் தலைமையில், மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர்குமார் ரெட்டி, உளவுத்துறை எஸ்.பி., நிஷா ஜேம்ஸ், சி.ஐ.டி., --- எஸ்.பி., லோகேஷ் ஜகல்சர், பெங்களூரு ரூரல் மாவட்ட ஏ.எஸ்.பி., வெங்கடேஷ் பிரசன்னா ஆகியோர் அடங்கிய எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மேலும், 16 போலீஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், எஸ் .ஐ.டி., குழுவில் உள்ள ஏ.எஸ்.பி., வெங்கடேஷ் பிரசன்னா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவரை விசாரணை குழுவிலிருந்து நீக்க வேண்டும் என சவுஜன்யாவின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், விரக்தி அடைந்த வெங்கடே ஷ், தன்னை எஸ்.ஐ.டி., குழுவிலிருந்து நீக்கக்கோரி, மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை