மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
பெங்களூரு:பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், கென்யா நாட்டு பிரஜையை கைது செய்த அதிகாரிகள், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 'கோகைன்' என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு, 'இண்டிகோ' விமானத்தில், மேற்கு ஆசிய நாடான தோகாவில் இருந்து, ஆப்ரிக்க நாடான கென்யாவை சேர்ந்த பிரஜை ஒருவர் வந்திறங்கினார்.அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், அவரின் பையை பரிசோதித்தனர். வெள்ளை நிறத்தில் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.இதை பரிசோதித்தபோது, கோகைன் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு, 30 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கென்யா பிரஜை மீது, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோன்று, ஜூலை 5ம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த இரண்டு பெண் பயணியரிடம், 3.2 கிலோ 'ஹைட்ரோலிக்' என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2