உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 10, பி.யு.சி., பொது தேர்வுகள் வெப் காஸ்டிங் கண்காணிப்பு

10, பி.யு.சி., பொது தேர்வுகள் வெப் காஸ்டிங் கண்காணிப்பு

பெங்களூரு: ''மார்ச் 1ம் தேதி முதல் 2ம் ஆண்டு பி.யு.சி., தேர்வுகளும், மார்ச் 21 முதல் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும். சலுகை மதிப்பெண் வழங்கப்படாது,'' என கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலம் முழுதும் மார்ச் 1ம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு துவங்குகிறது. 5,050 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், இதில், 7 லட்சத்து 13 ஆயிரத்து 862 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 6,61,474 பேர் புதிதாகவும்; 34,071 பேர் மறு தேர்வும், 18,317 பேர் தனியாகவும் தேர்வு எழுதுகின்றனர்.இதுபோன்று மார்ச் 21ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. 15,881 பள்ளிகளில் தேர்வுகள் நடக்கின்றன. மொத்தம் 8,96,447 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 8,42,817 பேர் புதிய மாணவர்கள். 38,091 பேர் மறு தேர்வும், 15,539 பேர் தனியாகவும் தேர்வு எழுதுகின்றனர். முன்னர் அறிவித்தபடி, தேர்வு மையங்கள் 'வெப்காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். யாருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படாது.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ