உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 11 போலி கிளீனிக்குகளுக்கு சீல்

11 போலி கிளீனிக்குகளுக்கு சீல்

தாவணகெரே: தலைமுடியை ஒட்டும் அறுவை சிகிச்சை செய்து வந்த கிளீனிக்குகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 11 போலி கிளினிக்குகளுக்கு 'சீல்' வைத்தனர். வழுக்கை தலையில் முடிவளர செய்யும் அறுவை சிகிச்சையை, வல்லுநர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால் தாவணகெரேவில், முறையான கல்வியின்றி, இத்தகைய சிகிச்சை அளிக்கும் கிளீனிக்குகள் செயல்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் சென்றன. தலைமுடிக்கு சிகிச்சை அளிக்கும் கிளீனிக்குகளில் சோதனை நடத்தும்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தாவணகெரே மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி அதிகாரிகள், நேற்று காலை தாவணகெரே நகரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். நான்கு கிளீனிக்குகள் மட்டுமே, அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்குகின்றன. தவிர 11 கிளீனிக்குகள் உரிமம் பெறாமல், சட்டவிரோதமாக இயங்குவது கண்டறியப்பட்டது. இந்த கிளீனிக்குகளில் டாக்டர்களே இல்லை. போலியான 11 கிளீனிக்குகளுக்கு அதிகாரிகள், 'சீல்'வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை