மேலும் செய்திகள்
தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி
06-May-2025
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 17 இரு சக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.பங்கார்பேட்டை ரயில் நிலையத்தின், வாகன நிறுத்துமிடத்தில் ஜூன் 1ம் தேதி ஹரிகிருஷ்ணா என்பவர் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.அதை காணவில்லையென பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ஆந்திர மாநிலம், சித்துாரின் சந்திராச்சாரி, 38, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் பங்கார்பேட்டை, காமசமுத்ரா, பேத்தமங்களா, ஹொசகோட்டை, குப்பம் ஆகிய இடங்களில் 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 17 இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டார். அவற்றை பங்கார்பேட்டை போலீசார் மீட்டனர்.
06-May-2025