உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரியாணி சாப்பிட சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் பலி

பிரியாணி சாப்பிட சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் பலி

நெலமங்களா: பைக் மீது லாரி மோதியதில், பிரியாணி சாப்பிட சென்ற இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, ஹரோக்யதனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சேத்தன், 21. இவரது தாய்க்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். தாயின் பிறந்தநாளை கொண்டாட சேத்தன் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தார். கேக் வெட்டியதும், நெலமங்களா டவுனில் உள்ள ஹோட்டலுக்கு சென்று பிரியாணி சாப்பிட சேத்தனும், அவரது நண்பர்களும் பைக்குகளில் புறப்பட்டனர். சேத்தனும், அவரது நண்பர் திலீப், 20, என்பவரும், ஒரு பைக்கில் சென்றனர். நெலமங்களா டவுன் பின்னமங்களா பகுதியில் சென்ற போது வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த சேத்தன், சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு போராடிய திலீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். நெலமங்களா போக்குவரத்து போலீசார், லாரி டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை