உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.10,000 கோடி முதலீட்டில் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி

ரூ.10,000 கோடி முதலீட்டில் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி

பெங்களூரு: மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது:கர்நாடகாவில் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண, அரசு திட்டம் வகுத்துள்ளது. 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.டெண்டர் பெறும் நிறுவனம், மின் உற்பத்தி செய்யும். அந்நிறுவனத்திடம் மாநில அரசு யூனிட்டுக்கு 3.17 ரூபாய் வீதம் வாங்கும்.மின்சாரத்துறையில் பொருளாதார பற்றாக்குறை இல்லை. கடந்தாண்டு 1,500 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். நடப்பாண்டு 3,000 லைன்மேன்கள் நியமிக்கப்படுவர். எங்கள் அரசு விவசாயிகளுக்கு, 19,000 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.காபி விவசாயிகள் மின்பாக்கி வைத்துள்ளனர். வட்டியுடன் பாக்கியை செலுத்தினால், அவர்களுக்கும் தேவையான மின்சார வசதி கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !