உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒரே பைக்கில் அபாயமாக பயணித்த 3 இளைஞர்கள்

ஒரே பைக்கில் அபாயமாக பயணித்த 3 இளைஞர்கள்

நெலமங்களா: நெலமங்களா சுங்கச்சாவடி அருகில், ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் அதிவேகமாகவும், குறுக்கும், நெடுக்குமாக சென்று பதற்றமான சூழ்நிலையை உருவாக்கினர்.பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், தேசிய நெடுஞ்சாலை - 4ல், சுங்கச்சாவனி அருகில், நேற்று முன் தினம் நள்ளிரவு, மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் அபாயகரமான முறையில் பயணம் செய்தனர். ஒரு இளைஞர் படுத்தபடியே, நம்பர் பிளேட்டை ஒரு கையால் மறைத்தபடியே பயணம் செய்தார்.அதிவேகமாக, குறுக்கும், நெடுக்குமாக பைக்கை ஓட்டி, மற்ற வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும்படியும், விபத்து ஏற்படும் வகையிலும் பயணம் செய்தனர். இவர்களை தங்கள் மொபைல் போனில் பதிவு செய்ய வாகன ஓட்டுநர் ஒருவர் முயற்சித்தபோது, மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டினார். தங்கள் பைக்கின் பதிவு எண் தெரியாமல், இரண்டு கைகளை வைத்து மூடிக்கொண்டனர்.இந்த காட்சியை சிலர், மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். போலீசாருக்கும் அனுப்பி பைக் இளைஞர்களை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.நெலமங்களா போக்குவரத்து போலீசார், அந்த இளைஞர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை