மேலும் செய்திகள்
வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
01-Mar-2025
'கர்நாடகா முழுதும் உள்ள மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாக குழுவில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் பதவிகள் ஒதுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் தீக் ஷா அம்ரிதேஷ் தாக்கல் செய்த மனுவில், 'கர்நாடகாவில் மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாக குழுவில், பெண்களுக்கு பதவி ஒதுக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 30 சதவீதம்
இம்மனு நேற்று நீதிபதிகள் சூர்யா கந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல், 'நடப்பாண்டு ஜனவரியில், பெங்களூரு வக்கீல்கள் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில், சங்க பொருளாளர் பதவியை, பெண் வக்கீல்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட பெங்களூரு வக்கீல் சங்கமும், தங்கள் நிர்வாகத்தில் 30 சதவீதம் பெண் வக்கீல்களுக்கு ஒதுக்கி உள்ளது' என்றார்.பின் நீதிபதிகள் கூறியதாவது:ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவு, கர்நாடகாவின் அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்கத்திற்கும் பொருந்தும். இச்சங்கங்களில் 30 சதவீதம் பெண் வக்கீல்களுக்கு பதவி வழங்குவதுடன், பொருளாளர் பதவியை பெண்களுக்கு தான் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து சங்கங்களும் அறிக்கை தயாரித்து, மாவட்ட செஷன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர்.
'துமகூரு மாவட்ட வக்கீல் சங்கத்தில், பெண் வக்கீல்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்' என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இம்மனு, மார்ச் 19ல் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏப்., 5ல் நடக்கும் வக்கீல் சங்க தேர்தலுக்கு தடை விதித்தார்.நேற்று இம்மனு மீதான விசாரணையின்போது, துமகூரு மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் வாதிடுகையில், 'துமகூரு மாவட்ட வக்கீல்கள் சங்க தேர்தல் முடிந்த பின், சங்கத்தின் விதிகளில் இந்த மாற்றம் கொண்டு வரப்படும்' என்றார்.இதற்கு நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:சங்கத்தின் வாதம் சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும், இதை தற்காலிகமாக தீர்வாக கருத முடியாது. பெண் வக்கீல்களுக்கு மட்டுமே பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால், எப்போது செய்வீர்கள்? வக்கீல்கள் சங்கங்கள் ஆண்களின் சங்கமாக மாற அனுமதிக்க முடியாது.ஒவ்வொரு வக்கீல் சங்கத்திலும் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தார்மீக கடமை மட்டுமல்ல, சட்டபூர்வமான கடமையும் உள்ளது.இதனால் ஆண்கள் கோட்டை அல்லது வயதான ஆண்கள் சங்கம் என்று அழைப்பதை தவிர்க்கலாம்.நாட்டில் உள்ள எந்த பெண்ணோ அல்லது வக்கீல் சங்கமோ, உலகில் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் இருந்தும், நமக்கு வாய்ப்பு இல்லையே என்று கூறக்கூடாது.ஏப்ரல் 5ம் தேதி நடக்கும் துமகூரு மாவட்ட வக்கீல்கள் சங்க தேர்தலில், ஒரு இணை செயலர் பதவியும், இரண்டு செயற் குழு உறுப்பினர் பதவியும் பெண் வக்கீல்களுக்கு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
01-Mar-2025