உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாயிடம் சேர்க்கப்பட்ட 4 புலி குட்டிகள்

 தாயிடம் சேர்க்கப்பட்ட 4 புலி குட்டிகள்

மைசூரு: தாயிடம் இருந்து பிரிந்த நான்கு புலிக்குட்டிகளை, மீண்டும் தாயிடமே வனத்துறையினர் சேர்த்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டம், நாகரஹொளேயில் உள்ள கவுதனகட்டே கிராமத்தில், விவசாயி பிரகாஸ் என்பவரை புலி தாக்கியது. புலியிடம் போராடி தப்பிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த வனத்துறையினர், புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நான்கு குட்டிகளுடன் புலி இருப்பதை, இரவு நேரத்தில், 'தெர்மல் கருவி' மூலம் கண்டுபிடித்தனர். தாய் புலி உணவு தேடிச் சென்ற போது மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தாயை தேடிய நான்கு குட்டிகளையும் வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட புலி குட்டிகள், மைசூரு மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. சிகிச்சை பெற்று வந்த தாய் புலியும், நேற்று குட்டிகளுடன் சேர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ