உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி

ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை சுவர்ண குப்பம் சதுக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி, சத்தியநாராயணா சமேத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி விழா, இன்று முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.இன்று காலையில் மகன்யாச பூர்வக ருத்ராபிஷேகம், ருத்ரஹோமம், புஷ்ப அலங்காரம்; 2ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் பக்த ஆஞ்சநேயர் உத்சவம்; 3ம் தேதி காலையில் புஷ்ப அலங்காரம், யோகி ஆஞ்சநேயர் உத்சவம்; 4ம் தேதி காலையில் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், பிரசாத வினியோகம், இரவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உத்சவம்; 5ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் அபயஹஸ்தா ஆஞ்சநேயர் உத்சவம்; 6ம் தேதி ராமநவமியன்ரு காலையில் புஷ்ப அலங்காரம், சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம், இரவில் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ராஜேந்திர பிரசாத் தீக் ஷித் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை