| ADDED : நவ 20, 2025 04:19 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு பதிலாக அமைக்கப்பட்ட, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் கிழக்கு, மேற்கு, சென்ட்ரல், வடக்கு, தெற்கு என்று 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 5 மாநகராட்சிகளின் கீழ் என்னென்ன வார்டுகள் வரும் என்ற அறிவிப்பை, ஜி.பி.ஏ., வெளியிட்டது. இதில் கிழக்கு மாநகராட்சிக்கு 50; மேற்கு மாநகராட்சிக்கு 111; சென்ட்ரல் மாநகராட்சிக்கு 63; வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு தலா 72 என மொத்தம் 368 வார்டுகள் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஆட்சேபனை காலங்கள் முடிந்த நிலையில், அனைத்தையும் ஒருங்கிணைந்து நேற்று இறுதி அறிவிப்பை, ஜி.பி.ஏ., வெளியிட்டது. மேற்கு மாநகராட்சியில் மட்டும் கூடுதலாக ஒரு வார்டு சேர்த்து, மொத்தம் 369 வார்டுகள் இருக்கும் என்று, ஜி.பி.ஏ., கூறி உள்ளது.