உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நினைத்ததை நிறைவேற்றும் நினைத்ததை நிறைவேற்றும் ஒரே இடத்தில் 5 கோவில்கள்

நினைத்ததை நிறைவேற்றும் நினைத்ததை நிறைவேற்றும் ஒரே இடத்தில் 5 கோவில்கள்

பெங்களூரு எலஹங்கா அருகே மார நாயக்கனஹள்ளி கிராமத்தில் அக்கயம்மா மலை உள்ளது. இந்த மலையில் அக்கயம்மா, பீமேஸ்வரா, கவி மகேஸ்வரி, முனீஸ்வரா, ராமர் ஆகிய ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன.இந்த ஐந்து கோவில்களுக்கும் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மலை அடிவாரத்தில் இருந்து 100 படிக்கட்டுகளில் ஏறி சென்றால் மலை உச்சியில் உள்ள கோவில்களை சென்றடையலாம். படிக்கட்டுகளில் நடக்க முடியாதவர்களுக்காக இன்னொரு வழி உள்ளது. அடிவாரத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்றால் ஒரு வளைவு வரும். அதன் உள்ளே நுழைந்து சென்றால் நேராக கோவில் வாசலை சென்றடையலாம்.ஐந்து கோவில்களில் அக்கயம்மா தேவி மிகவும் சக்தி வாய்ந்தது என்று பக்தர்கள் நம்புகின்றனர். கவி மகேஸ்வரி கோவில் சிறிய குகைக்குள் உள்ளது.ஐந்து கோவில்களும் மலை உச்சியில் இருப்பதால் சாமி தரிசனம் முடிந்ததும், மலை மீது அமர்ந்து பொழுது போக்கலாம். பாறைகள் மீது செதுக்கப்பட்டுள்ள நந்தி சிலைகள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன.கோவில்களின் அருகில் உள்ள பாறைகளில் நம் மனதில் எதை நினைத்து எழுதினாலும் அது நடக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாலையில் கோவில்களுக்கு சென்றால், மலை உச்சி மீது அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை காணலாம். விமானங்கள் பறப்பதையும் கண்டு ரசிக்கலாம்.குடும்பத்தினருடன் ஒரு நாள் பொழுதை கழிக்க ஆன்மிக பயணமாகவும், சுற்றுலா செல்லும் நோக்கிலும் இங்கு சென்று வரலாம்.கோவில்களின் நடை காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும்.பஸ்சில் இங்கு செல்ல நினைப்பவர்கள் மெஜஸ்டிக்கில் இருந்து எலஹங்கா, தேவனஹள்ளி செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் செல்லலாம். -- -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ