உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்

 ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில், குரங்கு காய்ச்சல் தென்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின் பிள்ளோடி கிராமத்தில், குரங்கு காய்ச்சல் பரவியதால் இரண்டு நாட்களுக்கு முன், கிராமத்துக்கு சென்று மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். இதில், 50 வயது பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில், குரங்கு காய்ச்சல் பரவும். எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ