உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போலீஸ் என மிரட்டி பெண்ணின் போனை பறித்த 6 பேர் கைது

 போலீஸ் என மிரட்டி பெண்ணின் போனை பறித்த 6 பேர் கைது

எச்.ஏ.எல்.: பெங்களூரில் ஆண், பெண் தங்கும் விடுதிக்குள் புகுந்து, போலீஸ் என கூறி மிரட்டி, பெண்ணிடம் இருந்து மொபைல் போனை பறித்த கேரளாவை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, கடந்த 7ம் தேதி நள்ளிரவில் நுழைந்த ஐந்து பேர், அங்கிருந்த இளம்பெண்ணின் அறைக்குள் புகுந்து, அவரை மிரட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அப்பெண், எச்.ஏ.எல்., போலீசில் புகார் செய்தார். அதில், 'முகமது நஜாஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்து, நண்பர்களானோம். என் பிறந்த நாளை ஒட்டி, நஜாசை என் அறைக்கு வரும்படி அழைத்தேன். அவரும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். 'விழா நடக்கும்போது, யாரோ கதவை தட்டினர். கதவை திறந்தபோது, தாங்கள் போலீஸ் என, ஐந்து பேர் உள்ளே வந்தனர். என்னையும், நஜாசையும் மிரட்டி பணம் கேட்டனர். பணம் இல்லை என்று கூறியதால், மொபைல் போனை பறித்துச் சென்றனர்' என குறிப்பிட்டிருந்தார். போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சருண் என்பவரை அடையாளம் கண்டனர். இவர் ஏற்கனவே, 'ஹனி டிராப்' வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டார். இதற்கு திட்டம் போட்டது, பெண்ணின் நண்பராக பழகிய முகமது நஜாஸ் என்பது, விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, சருண், 38, முகமது நஜாஸ், 24, விஷ்ணு, 23, திவாகர், 34, மதுகுமார், 32, கிரண், 29, ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை