மேலும் செய்திகள்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்
01-Nov-2025
பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்கள் பணியை துவங்கினர். கர்நாடகாவுக்கு பணி செய்ய தேர்வு செய்யப்பட்ட 2024 பேட்சை சேர்ந்த ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், நேற்று காலை உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது போலீஸ் டி.ஜி.பி., சலீம் உடனிருந்தார். இவர்கள் ஆறு பேரும் நேற்று தங்கள் பணியை தொடங்கினர். உத்தர பிரதேசத்தின் அனன்யா ஸ்ரீவத்சவ், மெகா அகர்வால், இஷிதா குப்தா, மஹாராஷ்டிராவின் பவர் சுபம் சுரேஷ், பீஹாரின் ரானு குப்தா, கர்நாடகாவின் பானு பிரகாஷ் ஆகியோர் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். இவர்களில் மூன்று பேர் பெண் அதிகாரிகள்.
01-Nov-2025