மேலும் செய்திகள்
மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு
01-May-2025
துமகூரு: துமகூரு மாவட்டம், திப்தூர் தாலுகா, அய்யான்பவி போவி காலனியை சேர்ந்த மஹாலிங்கையா, பாக்கியம்மா தம்பதியின் மகள் நாவ்யா, 6.இவர், நேற்று முன்தினம் மாலை தன் வீட்டருகே உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தெரு நாய்கள், எதிர்பாராத விதமாக சிறுமியை கடித்து குதறின. அப்போது, சிறுமியின் அழுகை குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர், நாய்களை விரட்டி, சிறுமியை மீட்டனர்.இதில் சிறுமியின் தலை, வயிறு, கைகள், கால்கள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை திப்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஹாசன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
01-May-2025