உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் 65வது ஆண்டு சண்டி மஹாயாகம்

ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் 65வது ஆண்டு சண்டி மஹாயாகம்

சிவாஜிநகர் : சிவாஜிநகர் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் 65வது ஆண்டு, சண்டி மஹா யாகம் நாளை மறுதினம் துவங்குகிறது.பெங்களூரு சிவாஜிநகர் சிவாஜி சதுக்கத்தில், ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 65வது ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாம பூஜை மற்றும் சண்டி மஹா யாகம் வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. வரும் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் காலையில் கணபதி பூஜை, புண்யாகவச்சனம் நடக்கிறது. இந்த நாட்களில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரையும் லட்ச லலிதா சஹஸ்ரநாம பூஜை நடக்கும்.இப்பூஜை 11ம் தேதி மதியத்துடன் நிறைவு பெறும். தினமும் மதியம் 12:00 மணி, இரவு 8:00 மணிக்கு மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் நடக்கிறது. 11ம் தேதி காலையில் சுமங்கலி பூஜை நடக்கிறது.வரும் 12ம் தேதி சண்டி மஹா யாகத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை, புண்யாஹவச்சனம் சங்கல்பம், கலச ஸ்தாபனம்; காலை 8:30 மணி முதல் மஹா சண்டி யாகம் துவக்கம். மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹுதி, மதியம் 1:00 மணிக்கு மஹா மங்களாரத்தி; மதியம் 1:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா நாட்களில் சப்தஸதி பாராயணம்; ஸ்ரீ சக்கர அர்ச்சனை, ஸ்ரீ சக்கர ஹோமம் நடக்கும். தினமும் காலை 10:30 மணிக்கு பிரகார உற்சவம் நடக்கிறது.சண்டி மஹா யாக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்து அருள்பெறுமாறு கோவில் டிரஸ்டிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை