மேலும் செய்திகள்
மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர்
19-Apr-2025
பெங்களூரு: நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பணியாற்றும் உமா சங்கரின் பதவி காலம், இம்மாதம் இறுதியில் முடிவடைகிறது. அந்த இடத்துக்கு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளது.கர்நாடக நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பணியாற்றும் உமா சங்கர், இம்மாதம் இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இவரால் காலியாகும் இடத்தில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவர் இதற்கு முன், 'பெஸ்காம்' எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம் மற்றும் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவராக இருந்தவர். கடந்த இரண்டரை ஆண்டாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக பணியாற்றுகிறார். நகர நிர்வாகம் குறித்து, நன்கு அறிந்தவர். எனவே இவரே நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளது.இதற்கிடையே இந்த பதவியை, மற்றொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கவுரவ் குப்தா எதிர்பார்க்கிறார்.தற்போது இவர் மின் துறை செயலராக பணியாற்றுகிறார். துஷார் கிரிநாத்தை போன்று, கவுரவ் குப்தாவும், பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் வாரியம் என, இரண்டிலும் பணியாற்றியவர். நகரின் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை அறிந்தவர். எனவே நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் பதவி கிடைக்கும் என, நம்புகிறார்.கடந்த 25 ஆண்டுகளாக, துணை முதல்வர் சிவகுமாருடன், நல்லுறவுடன் இருப்பவர் துஷார் கிரிநாத். இவருக்கே பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
19-Apr-2025