சிகரெட் துண்டு உயிரை பறித்தது
தொட்டபல்லாபூர்: அணைக்காமல் போட்ட, சிகரெட் துண்டால் வீட்டில் தீப்பிடித்து, வாலிபர் உடல் கருகி இறந்தார்.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தாலுகா கண்ணமங்களா கிராமத்தில் வசித்தவர் உதய், 31. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இரவு மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். குடிபோதையில் சிகரெட்டை பாதி அளவு புகைத்துவிட்டு, மீதியை அணைக்காமல் போட்டார்.அதில் இருந்த தீப்பொறி, வீட்டில் இருந்த துணி மீது விழுந்து தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உடல் கருகி உதய் இறந்து கிடந்தார்.தொட்டபெலவங்கலா போலீசார் விசாரிக்கின்றனர்.