உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காவிரி ஆரத்தியை பார்க்க 10,000 பேருக்கு மேடை

காவிரி ஆரத்தியை பார்க்க 10,000 பேருக்கு மேடை

பெங்களூரு: ''தசராவின்போது கே.ஆர்.எஸ்., அணையில், காவிரி ஆரத்தியை 10,000 பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மைசூரு தசராவின்போது, கே.ஆர்.எஸ்., அணையில், 10,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.இவர்களுக்கு ஹிந்து அறநிலையம், சுற்றுலா, கன்னடம் - கலாசாரம் உட்பட பல்வேறு துறைகள் ஒத்துழைப்பு வழங்குவர்.பாதுகாப்பு காரணங்களுக்காக அணையில் இருந்து சிறிது தொலைவில் மேடை அமைக்கப்படும். இதற்கான பொறுப்பு, தொழில்நுட்ப குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.காவிரி ஆரத்தியை பார்க்கும் வகையில், நான்கு திசைகளிலும் மேடை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !