மேலும் செய்திகள்
மட்டன் இஞ்சி விரவல்
31-Aug-2025
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் பலரும் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பர். இதற்கு பின்னாடி சில அறிவியல் காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால். அசைவ உணவுகளை தவிர்த்து, எளிதில் செரிமானமாகும் சைவ உணவுகளை உட்கொள்வது நல்லது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகளோ, ஞாயிற்றுகிழமை என்றாலே அசைவ உணவு வேண்டும் என்று அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில், அசைவ உணவு வாசனையுடன் வெஜிடபிள் பிரியாணி செய்து கொடுங்கள், புரட்டாசி முடியும் வரை அசைவ உணவு வேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டார்கள். செய்முறை குக்கரில் முதலில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும் சூடானவுடன், அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு போட்டு நன்றாக வதக்கவும் பொறிஞ்சி வந்ததும், நீள வாக்கில் வெட்டிய வெங்காயத்தை போட்டு, சிறிது பொன் நிறமாக வரும் வரை வதக்கவும் பின் தக்காளியுடன் அதனை போட்டு வதக்கவும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.. இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் நறுக்கிய அரை கப் கேரட், பீன்ஸ், கால் கப், பச்சை பட்டாணி, நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும் ஒரு டீஸ்பூன் பிரியாணி மசாலா, மிளகாய் துாள், கால் டீஸ்பூன் மஞ்சள் துாள், உப்பு தேவையான அளவு சேர்த்து, 30 விநாடிகள் வதக்கவும் மல்லி இலை, தயிர், எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலக்கவும். மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும் தண்ணீர் கொதித்த பின், அரிசியை போட வேண்டும் மூடி வைத்து ஒரு விசில் வர வேண்டும். விசில் வந்தவுடன், இரண்டு நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். இரண்டு நிமிடங்களுக்கு பின் குக்கரை திறந்தால், மணமணக்கும் வெஜிடபிள் பிரியாணி தயாராகி விடும். தேவையான பொருட்கள் * எண்ணெய் -- 2 டேபிள் ஸ்பூன் * நெய் - 2 டேபிள் ஸ்பூன் * பட்டை - 1 * லவங்கம் - 3 * ஏலக்காய் - 3 * பிரியாணி இலை - 2 * நட்சத்திர சோம்பு - 1 * வெங்காயம் - 2 * பச்சை மிளகாய் - 2 * தக்காளி பெரியது -- 2 * இஞ்சி பூண்டு பேஸ்ட் -- ஒரு டேபிள் ஸ்பூன் * கேரட் --- 2 * பீன்ஸ் -- 7 * பச்சை பட்டாணி -- கால் கப் * உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் * பிரியாணி மசாலா --ஒரு டீஸ்பூன் * மிளகாய் துாள் - ஒரு டீஸ்பூன் * மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன் * உப்பு -- தேவையான அளவு * மல்லி இலை - கால் கப் * தயிர் -- 2 டேபிள் ஸ்பூன் * அரிசி -- அரை கிலோ - நமது நிருபர் -
31-Aug-2025