உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு

நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடுவது போன்று, தன் 'எக்ஸ்' பதிவில் பதிவிட்ட பிரசாந்த் சம்பரகி மீதான விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், பிராயக்ராஜ்ஜில் மஹா கும்ப மேளா நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.ஹிந்து ஆதரவு பிரமுகர் பிரசாந்த் சம்பரகி, தன் 'எக்ஸ்' பக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், புனித நீராடுவது போன்று படத்தை வெளியிட்டிருந்தார்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரகாஷ் ராஜ், மைசூரு லட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.இதற்கிடையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு தடை விதிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் சம்பரகி மனுத் தாக்கல் செய்திருந்தார்.நேற்று இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், பிரசாந்த் சம்பர்கியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தார். அத்துடன், இது தொடர்பாக பிரகாஷ் ராஜ், லட்சுமிபுரம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அவர், விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
பிப் 18, 2025 13:44

பதிவு போட்டவன் அறிவாளி. புகார் அளித்தவன் பெரிய arivaali. கோர்ட் செலவை 5 மடங்கு வசூலிக்க வேண்டும் .


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 12:57

அப்போ அது பொய்யா கோப்பால் ??


V SURESH
பிப் 18, 2025 08:54

நான் போகவில்லை. அது பொய் செய்தி என சொல்ல வேண்டியதுதானே. எதற்கெடுத்தாலும் கோர்ட் கேஸ் என்று . கோர்ட்டாருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளது.


sankaranarayanan
பிப் 18, 2025 08:16

அப்போ பிரகாஸ்ராஜ் குளிக்கவே மாட்டாரா