உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை

துப்பாக்கி காட்டி மிரட்டல் ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை

மடிவாளா : ஹோட்டல் ஊழியர்களிடம் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய, ஏ.எஸ்.ஐ.,யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பெங்களூரு மடிவாளா போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., குமார், 45. இவர், கடந்த மாதம் 23ம் தேதி ஜக்கசந்திராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணி செய்யும் ஊழியர்களை துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் சார்பில், தென்கிழக்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமாவிடம் புகார் செய்யப்பட்டது. குமாரிடம் விசாரிக்க, டி.சி.பி., உத்தரவிட்டார்.விசாரணையின் போது, 'ஹோட்டல் நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையில் சம்பளம் தொடர்பாக தகவல் இருந்தது. கடந்த 23 ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அங்கு வேலை செய்யும் ஊழியர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால் நான் அங்கு சென்று விசாரித்தேன். நான் அணிந்திருந்த காக்கி பேன்ட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் துப்பாக்கியை வைக்கும் பை கிழிந்து இருந்தது. இதனால், துப்பாக்கியை கையில் எடுத்து வைத்திருந்தேன்' என்று குமார் கூறினார்.ஆனால், ஹோட்டலில் பிரச்னை நடப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கோ, போலீஸ் நிலையத்திற்கோ எந்த தகவலும் வரவில்லை என்பது தெரிந்து உள்ளது. குமார் ஏன் பொய் சொன்னார், ஹோட்டல் ஊழியர்களை ஏன் துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்று தெரியவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை