உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்., நடத்திய போராட்டத்தில்  ஏ.எஸ்.ஐ.,யின் செயின் திருட்டு 

 காங்., நடத்திய போராட்டத்தில்  ஏ.எஸ்.ஐ.,யின் செயின் திருட்டு 

ஷிவமொக்கா: 'நே ஷனல் ஹெரால்டு' வழக்கில், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, பெண் ஏ.எஸ்.ஐ.,யின் தங்க செயின் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஷ னல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து, காங்கிரஸ் மீது வெறுப்பு அரசியல் செய்வதாக, பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன் கூடிய இளைஞர் காங்கிரசார், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இளைஞர் காங்கிரசாரை கைது செய்து பஸ்களில் ஏற்றிச் சென்றனர். நேற்று காலையிலும் மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பீதர், துமகூரு, சித்ரதுர்கா, ஷிவமொக்கா உட்பட மாநிலம் முழுதும் பல பகுதிகளில், இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஷிவமொக்காவில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றும் போது, தொட்டபேட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி எஸ்.ஐ., அமிர்தாபாய், கழுத்தில் அணிந்திருந்த, 60 கிராம் எடையுள்ள தங்க செயின் திருடப்பட்டது. அமிர்தாபாய் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை