| ADDED : நவ 18, 2025 04:50 AM
பெங்களூரு: சிறைகள் மேம்பாட்டுத் துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தா பெயரில், மர்ம கும்பல் போலியான முகநுால் கணக்கு துவங்கி மோசடி செய்துள்ளது. கர்நாடக சிறைகள் மேம்பாட்டுத் துறையின் ஏ.டி.ஜி.பி.,யாக தயானந்தா உள்ளார். சமீபத்தில் இவரது பெயரில் மர்ம நபர்கள் போலியான முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர். இதில் அவரது படங்களை பயன்படுத்தி முகநுால் மூலம், பலருக்கும் மெசேஜ் அனுப்பி பண உதவி கோரியுள்ளனர். 'பிரென்ட்ஸ் ரிக்வெஸ்ட்'டும் அனுப்பி உள்ளனர். இதை பார்த்த சிலர் சந்தேகமடைந்து, ஏ.டி.ஜி.பி., தயானந்தாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும் தன் பெயரில் போலியான முகநுால் கணக்கு செயல்படுவதை கவனித்து, மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடிக்கும்படி, சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன்படி போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.