உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்டோ கட்டண உயர்வு போதாது அதிகம் வசூலிக்கும் ஓட்டுநர்கள்

ஆட்டோ கட்டண உயர்வு போதாது அதிகம் வசூலிக்கும் ஓட்டுநர்கள்

பெங்களூரு : ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டும் திருப்தியடையாத சில ஓட்டுநர்கள், பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு பஸ்கள், மெட்ரோ ரயில் கட்டணத்தை தொடர்ந்து, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும்படி, ஓட்டுநர்கள் வலியுறுத்தினர். ஒரு வழியாக ஆகஸ்ட் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அரசின் உத்தரவுப்படி, முதல் 2 கி.மீ., துார பயண கட்டணம் 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாகவும், அதன் பின், ஒவ்வொரு கி.மீ., துாரத்துக்கும் 15 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டது. காத்திருப்பு கட்டணம் முதல் ஐந்து நிமிடம் இலவசமாகவும், அதன்பின் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஐந்து ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று பயணியர், 20 கிலோ வரையிலான லக்கேஜ்களை ஆட்டோவில் இலவசமாக கொண்டு செல்லலாம். அதன்பின் 20 முதல் 50 கிலோ வரையிலான லக்கேஜ்களுக்கு, தலா 20 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். பயண கட்டணத்தை அரசு உயர்த்தியும், ஆட்டோ ஓட்டுநர்கள் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் 2 கி.மீ.,க்கும் குறைவான துாரம் செல்ல 100 ரூபாயும், மூன்று, நான்கு கி.மீ., துாரம் செல்ல 130 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு முதன்மை செயலர் ருத்ரமூர்த்தி கூறியதாவது: எங்களிடம் கருத்து கேட்காமல் ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்தினர். 90 சதவீதம் பேர், மொபைல் செயலி மூலமாக, ஆட்டோக்களை இயக்குகின்றனர். இதனால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. செயலி பயன்படுத்துவதால், பயணியரிடம் பேரம் பேசுவது தவிர்க்கப்படுகிறது. தங்களுக்கு விருப்பமான வழியை ஓட்டுநர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை