உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் வக்கீல் தற்கொலை  டி.எஸ்.பி.,க்கு ஜாமின்

பெண் வக்கீல் தற்கொலை  டி.எஸ்.பி.,க்கு ஜாமின்

பெங்களூரு: பெண் வக்கீல் ஜீவா தற்கொலை வழக்கில், பெண் டி.எஸ்.பி., கனகலட்சுமிக்கு, உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.கர்நாடக போவி மேம்பாட்டு ஆணையத்தில் 100 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, சி.ஐ.டி., விசாரிக்கிறது. பெங்களூரு பனசங்கரியில் வசித்த பெண் வக்கீல், தொழில் முனைவோருமான ஜீவாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அதிகாரி கனகலட்சுமி தனது ஆடைகளை களைந்து விசாரித்ததாகவும், லஞ்சம் கேட்டு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 22 ம் தேதி ஜீவா தற்கொலை செய்தார்.இந்த வழக்கில் கடந்த மாதம் 11ம் தேதி, கனகலட்சுமி கைது செய்யப்பட்டார். ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி விசாரித்து வந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறி, ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை