உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; கோரமங்கலா சந்திப்பில் 33 வயதுடைய பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நன்கு அறிமுகமான ஒருவர் அருகே வந்து பேசிக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் பேச்சுக்கு பின்னர், பெண்ணை, அந்த நபர் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த ஆண் நண்பரின் நண்பர்கள் 3 பேர் சொல்லி வைத்தபடி அங்கு வந்துள்ளனர். 4 பேரும் கூட்டு சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி அந்த பெண்ணை அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர். அதிர்ச்சி மற்றும் பயத்தில் இருந்த பெண் கோரமங்கலா போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார்.இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கோரமங்கலா சந்திப்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி நடந்த சம்பவம் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் தொடர் விசாரணை நடத்தி வட இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.இதுகுறித்து பெங்களூரு தென்கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சாரா பாத்திமா கூறி இருப்பதாவது; 112 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு நாங்கள் விரைந்து சென்றோம். கோரமங்கலா போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் வன்கொடுமை பற்றிய வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. 4 பேர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை கைது செய்துள்ளோம். அவர்களின் 3 பேரின் பெயர்கள் அஜித், விஷ்வாஸ், ஷிவு என்பதாகும். 3 பேர் ஹோட்டல் ஒன்றில் சப்ளையர்களாகவும், ஒருவர் சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.அவர்களில் 3 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். ஒருவர் உத்தராகாண்டில் இருந்து வந்தவர். பாதிக்கப்பட்ட பெண் டில்லியில் இருந்து வந்தவர். திருமணமானவர். கணவருடன் பெங்களூருவில் இருக்கிறார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். இதே பகுதியில் கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வருகிறார். வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vadivelu
பிப் 23, 2025 02:19

வடா மாநில வாலிபர்களா , கிழக்கு நாட்டு அயோக்கியர்களா ?


RAAJ68
பிப் 22, 2025 11:47

முன்பின் தெரியாத நபர் பேச்சு கொடுத்தாராம் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாராம். உனக்கு புத்தி எங்க போச்சு.


Kanns
பிப் 22, 2025 10:28

Alao Arrest Such Freely Roaming SexHungry AntiSocial Girls Without BiasedCookups Always Favouring Such Women


sridhar
பிப் 22, 2025 09:47

முன்பு சந்தித்த ஞாபகம் கூட இல்லாத போது அவர் கூப்பிட்ட ஹோட்டல் போவதும் , மாடிக்கு போய் நள்ளிரவில் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு நல்ல பெண் செய்யும் வேலை தானா .


அப்பாவி
பிப் 22, 2025 08:45

கர்மம்.. கர்மம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 22, 2025 06:19

நடு ராத்திரி, கூப்பிட்டான், சாப்பிட்டான், காசு கொடுக்காம, இருந்த காசையும் பிடுங்கிட்டான், ஓசியில் சிலரும் சாப்பிட்டுவிட்டு ஓடிவிட்டனர், நிலாச்சோறு.


Mani . V
பிப் 22, 2025 06:08

கதை நம்பும்படி இல்லையே.


திருஞானம்
பிப் 22, 2025 06:05

இது நம்பும் படியாக இல்லை


raman
பிப் 22, 2025 05:25

இது அந்தப் பெண் செய்த குற்றம். நள்ளிரவில் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய், பின் குற்றம் சுமத்துகிறாள். நல்ல பெண்ணாக இருந்தால் முதலில் அவன் பேசினபோதே உஷாராகி தப்பித்துஇருக்க வேண்டும். சாப்பிட்டு மொட்டை மாடி வரை போக வேண்டிய அவசியம் என்ன. கிடைத்த பணம் போதவில்லை. குற்றம் சுமத்துகிறாள். ஆனாலும் பெண்ணுக்கு சாதகமாக வழக்கு இருக்கும்.


திருஞானம்
பிப் 22, 2025 06:06

இது நம்பும் படியீல்லை


Ranga
பிப் 22, 2025 04:32

நாடு நாசமா போகுது மக்களும் சரி இல்ல சட்டமும் சரி இல்ல ஆள்பவன்ட் சரிஇல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை