உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெஸ்காம் இணையதள சேவை நாளை முதல் 27 வரை இருக்காது

பெஸ்காம் இணையதள சேவை நாளை முதல் 27 வரை இருக்காது

பெங்களூரு : 'இணையதள சேவை மேம்படுத்தப்பட உள்ளதால், வரும் 25 இரவு முதல் 27ம் தேதி இரவு வரை இரண்டு நாட்களுக்கு ஆன்லைன் சேவைகள் இருக்காது' என, பெஸ்காம் அறிவித்துள்ளது. பெஸ்காம் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தின் கீழ், பெஸ்காம், மெஸ்காம், ஜெஸ்காம், ஹெஸ்காம், செஸ்காம் ஆகிய ஐந்து மின் விநியோக நிறுவனங்கள், மின்சாரம் வினியோகித்து வருகின்றன. இந்நிறுவனங்களின் இணைய சேவை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள், வரும் 25ம் தேதி இரவு 8:00 மணி முதல் 27ம் தேதி இரவு 10:00 மணி வரை நடக்கிறது. அதன் பின்னர், வழக்கம் போல் இணையதள சேவை தொடரும். எனவே, இந்த காலகட்டத்தில் மின் கட்டணமோ, புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கவோ, புகார் அளிக்கவோ முடியாது. புதிதாக மேம்படுத்தப்பட உள்ள பணியால், முந்தைய சேவையை விட, விரைவாக செயல்பட துவங்கும். எனவே, பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெங்களூரு நகர மாவட்ட ம், பெஸ்காமுக்கு உட்பட்ட சித்லகட்டா, சிக்கபல்லாபூர், கோலார், சிந்தாமணி, கனகபுரா, ராம்நகர், தாவணகெரே - 1, தாவணகெரே - 2, சித்ரதுர்கா, துமகூரு - 1, துமகூரு - 2, சிரா, சென்னபட்டணா, ஆனேக்கல், முல்பாகில், பங்காருபேட், கவுரிபிதனுார், ஹொஸ்கோட், தொட்டபல்லாபூர், கே.ஜி.எப்., சல்லகெரே, குனிகல், ஹரப்பனஹள்ளி, ஹரிஹர், ஹிரியூர், திப்டூர் நகர துணை பிரிவுகளில் ஆன்லைன் சேவை மே ம்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !