உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பைக் டாக்சி தடை எதிரொலி வாடகை பைக்குகள் அறிமுகம்

பைக் டாக்சி தடை எதிரொலி வாடகை பைக்குகள் அறிமுகம்

பெங்களூரு,: கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெங்களூரில் வாடகை பைக்குகள் சேவை துவங்கி உள்ளது.பெங்களூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வாடகை பைக்குகளின் மவுசு அதிகமாக இருந்தது. இதன் பின், கொரோனா, பைக் டாக்சிகள் வருகையால் வாடகை பைக்குகளின் தேவை குறைந்தது. இதனால், வாடகை பைக்குகள் பயன்படுத்துவது முற்றிலும் நின்றிருந்தது.கர்நாடகாவில் சில வாரங்களுக்கு முன்பு, பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது வாடகை பைக்குகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, 'பவுன்ஸ் டெய்லி' என்ற நிறுவனம், வாடகை பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.இது பெங்களூரு நகரத்தில் உள்ள வேலைக்கு செல்வோரை குறிவைத்து நடைமுறைக்கு வந்துள்ளது. ஜே.பி., நகர், எலஹங்கா, ஆர்.ஆர்., நகர், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் ஆகிய பகுதிகளில் வாடகை பைக் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பைக்குகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எலக்ட்ரிக் பைக்குகளே. பைக்கின் ஒரு நாள் வாடகை 240 முதல் 280 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக்கை வாடகைக்கு எடுக்க, மூன்று நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும். வாடகை எடுத்த பைக்குகளை பைக் மையங்களில் கொண்டு வந்து சரியான நேரத்திற்கு விட வேண்டும்.முந்தைய காலத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்தது போல, இன்றைய கட்டத்தில் பைக்குகள் வாடகைக்கு விடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி