உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., அரசின் மாஜி சுகாதார அமைச்சர் சுதாகருக்கு... சிக்கல்?: கொரோனா காலத்தில் 32 பேர் பலி வழக்கில் அறிக்கை

பா.ஜ., அரசின் மாஜி சுகாதார அமைச்சர் சுதாகருக்கு... சிக்கல்?: கொரோனா காலத்தில் 32 பேர் பலி வழக்கில் அறிக்கை

கொரோன காலகட்டமான, 2020 - 21ம் ஆண்டுகளில் கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்தது. மாநிலம் முழுதும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த, எடியூரப்பா அரசு உத்தரவிட்டது. ஒரே நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், சாம்ராஜ் நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2021 மே 2ம் தேதி இரவு முதல் 3ம் தேதி அதிகாலை வரை, இவர்களுக்கு, 'ஆக்சிஜன்' பற்றாக்குறை ஏற்பட்டது. நோயாளிகளை காப்பாற்ற டாக்டர்கள், செவிலியர்கள் போராடியும், பலனின்றி, 32 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், மருத்துவமனை முன் குவிந்து கதறி அழுதனர். அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், மாவட்ட பொறுப்பு வகித்த அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், 'நிவாரண தொகை வழங்கப்படும்; வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்' என்றும் உறுதி அளித்திருந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'அரசின் நிர்வாக தோல்வியே இதற்கு காரணம்' என்று காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கண்டனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். . இச்சம்பவம் குறித்து விசாரிக்க அப்போதைய பா.ஜ., அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில் கமிஷன் அமைத்தது. ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. விசாரணை நடத்திய கமிஷன், அரசிடம் அறிக்கையும் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிடவே இல்லை. ஆனாலும், பா.ஜ., அரசு, 'ஆக்சிஜன் பற்றாக்குறையால் இச்சம்பவம் நடக்கவில்லை' என்றே மறுத்து வந்தது. குன்ஹா கமிஷன் கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, இதை ஆயுதமாக பயன்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது. 'உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும்' என்றும் சித்தராமையா கூறியிருந்தார். இதன்படி, 2023ல் காங்., ஆட்சிக்கு வந்ததும், சுகாதாரத்துறை அமைச்சராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். பா.ஜ., அமைத்த பி.ஆர்.பாட்டீல் தலைமையிலான கமிஷன் அறிக்கையை ரத்து செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் புதிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன், மீண்டும் விசாரணையை துவக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் முதல்வரின் இல்லமான 'காவேரி'யில், முதல்வர் சித்தராமையாவிடம், நீதிபதி மைக்கேல் குன்ஹா, விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அரசு துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் வழிமுறைகள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும், 'சுகாதார அவசர நிலையின் போது, சுகாதார உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், நீதி கிடைக்கும்' என்று நம்பி, வழக்கின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அத்துடன், மருத்துவமனையில் பதிவேடுகள், வழக்கு பதிவுகள் சிதைக்கப்பட்டது போன்ற முரண்பாடுகளையும் இந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது' என அதிகாரிகள் சிலர் கூறினர். மருத்துவமனை பதிவேடுகளில் முரண்பாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், அப்போது சுகாதார துறை அமைச்சராகவும், இப்போது சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி.,யாகவும் உள்ள சுதாகருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இவர், அமைச்சர் பதவிக்காக காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சரானார். அதனால், இவர் மீது காங்கிரஸ் தலைவர்கள் கடுங்கோபத்தில் இருந்தனர். அதேவேளையில், வரும் 8ம் தேதி பெலகாவியில் துவங்க உள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் மாநில அரசின் தோல்விகள் குறித்து விவாதிக்க பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் தயாராக உள்ளன. அதனால், பா.ஜ., மற்றும் சுதாகருக்கு ஒரே நேரத்தில், 'செக்' வைக்கும் வகையில், இந்த அறிக்கையை பயன்படுத்த காங்., அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ