உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் இல்லத்திற்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

முதல்வர் இல்லத்திற்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பெங்களூரு: முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு சதாசிவநகரில் உள்ள முதல்வர் சிவகுமாரின் இல்லத்தில், கடந்த 5ம் தேதி வழக்கம் போல, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மல்லேஸ்வரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பகவந்த்ரயா, 26, தனது மொபைல் போனை போலீசாரிடம் கொடுத்தார். ‘மொபைல் போன் இணைப்பில் இருக்கும் பயணி கூறும் இடம் எனக்கு தெரியவில்லை. அந்த இடம் எங்கு இருக்கிறது என அவரிடம் சொல்லுங்கள்’ என்று கூறினார். இதை ஏற்ற போலீசாரும் மொபைல் போனை வாங்கி பேசினர். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர், ‘முதல்வர் வீட்டிலும், விதான் சவுதாவிலும் வெடிகுண்டு வைத்து உள்ளேன். சிவகுமார் செல்லும் போது வெடிகுண்டு வெடிக்கும்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் பதறிப்போன போலீசார், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் முதல்வர் வீடு, விதான் சவுதா, ஆட்டோ முழுதும் சோதனையிட்டனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரையும் தீவிரமாக விசாரித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சதாசிவநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆட்டோ முன்பதிவு செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில், முதல்வரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பெங்களூரு பேடரஹள்ளி பாலாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக், 20, என்பது தெரிய வந்தது. கார்த்திக், கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவருக்கு மனநல பிரச்னைகள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி