உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமி கூட்டு பலாத்காரம் நான்கு பேர் மீது வழக்கு

சிறுமி கூட்டு பலாத்காரம் நான்கு பேர் மீது வழக்கு

ஹாவேரி: இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 16 வயது சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து, வாலிபர் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹாவேரி மாவட்டம், ஹனகல் நகரில் வசிப்பவர் உதய், 25. இவருக்கு நடப்பாண்டு மார்ச்சில், இன்ஸ்டாகிராமில் 16 வயது சிறுமி அறிமுகமானார். அவருடன் நெருங்கி பழகி, பலாத்காரம் செய்தார். அதன்பின் நண்பர்களுக்கு சிறுமியை அறிமுகம் செய்துள்ளார். அவரை மிரட்டி வரவழைத்து , கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை சிறுமி யாரிடமும் கூறவில்லை. தற்போது சிறுமி கருவுற்றதால், நடந்த விபரீதத்தை பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஹனகல் போலீஸ் நிலையத்தில் பு கார் அளித்தனர். உதய், இவரது நண்பர்கள் கிஷன், ஆகாஷ், சந்துரு ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை