மேலும் செய்திகள்
சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது 'போக்சோ'
16-Jun-2025
ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு மீது வழக்கு பதிவாகியுள்ளது.ஹூப்பள்ளியின், கன்டிகேரி போலீஸ் நிலையத்தின், 112 பிரிவில் ஏட்டாக பணியாற்றுபவர் ஹஜரத் மிட்டேகான், 45. இந்த போலீஸ் நிலைய பகுதியில், தம்பதி தங்களின் 6 வயது மகளுடன் வசிக்கின்றனர். தம்பதிக்கு அவ்வப்போது சண்டை வந்தது. இதனால் கோபமடைந்த மனைவி, 112ல் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். புகாரை விசாரிப்பது போன்று, பெண்ணின் வீட்டுக்கு ஏட்டு ஹஜரத் மிட்டேகான் வந்தார். பெண்ணுடன் நெருங்கி பழகினார். இது கள்ளத்தொடர்பாக மாறியது. அவ்வப்போது அவரது வீட்டுக்கு சென்றார். இவ்வேளையில் பெண்ணின் 6 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் கோபமடைந்த சிறுமியின் தந்தை, கன்டிகேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி ஹஜரத் மிட்டேகான் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
16-Jun-2025