உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய மூவர் மீது வழக்கு

மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய மூவர் மீது வழக்கு

ஷிவமொக்கா: சாகராவின் கவுதம்புரா கிராமத்தில் மூதாட்டி ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின் கவுதம்புரா கிராமத்தில் வசிப்பவர் ஹுச்சம்மா, 67. இவரது வீட்டு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரேமா என்பவர், தினமும் குப்பையை கொட்டுவது வழக்கம். தன் வீட்டு முன் அசுத்தம் செய்ய வேண்டாம் என, ஹுச்சம்மா பல முறை கூறியும் பிரேமா பொருட்படுத்தவில்லை.அதே போன்று, நேற்று காலையும் குப்பையை கொட்டினார். இதை ஹுச்சம்மா தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் சேர்ந்து, ஹுச்சம்மாவை மூதாட்டி என்றும் பாராமல், வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கினர்.கம்பத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்கினர்; தகாத வார்த்தைகளால் திட்டினர். அப்பகுதியினர் தலையிட்டு, மூதாட்டியை விடுவித்தனர்.இது தொடர்பாக, அனந்தபுரா போலீஸ் நிலையத்தில், மூதாட்டி புகார் செய்தார். இதன்படி பிரேமா உட்பட மூவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. மூவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ