உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரேணுகாச்சார்யா மீது வழக்கு பதிவு

ரேணுகாச்சார்யா மீது வழக்கு பதிவு

தாவணகெரே ; விநாயகர் சதுர்த்திக்கு டிஜேக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு டிஜே பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதை கண்டித்து, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா தலைமையில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். ஆட்சேபனைக்கு உரிய வகையில் அவர் பேசினார். கலெக்டர் உத்தரவுக்கு எதிராகவும், இளைஞர்களுக்கு தவறான தகவல் பரப்பியதாகவும் அவர் மீது தாவணகெரே நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ