உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

கோனனகுண்டே: இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து, 3, வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. பெங்களூரு, கொட்டிகெரேவின், வீவர்ஸ் காலனியின் 10வது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விநோத், 35. இவரது மனைவி காவ்யா, 30. தம்பதிக்கு வேஹாந்த், 3 என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் 2வது மாடியில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து குழந்தை வேஹாந்த் தவறி கீழே விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தது. கோனனகுண்டே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை