உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமி கொலை வழக்கு சி.ஐ.டி., சிங் ஆய்வு

சிறுமி கொலை வழக்கு சி.ஐ.டி., சிங் ஆய்வு

ஹூப்பள்ளி : ஐந்து வயது சிறுமி கொலை வழக்கில் என்கவுன்டர் நடந்த இடத்தில் சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பி.கே.சிங் நேற்று ஆய்வு செய்தார்.ஹூப்பள்ளி, அசோகா நகரில் கடந்த 13ம் தேதி ஐந்து வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ் குமார், 35, அசோக் நகர் போலீசாரால் 'என்கவுன்டர்' செய்யப்பட்டார்.இந்த என்கவுன்டர் குறித்து சந்தேகங்கள் எழுந்தன. வழக்கை சி.ஐ.டி., போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்தது. கடந்த 15ம் தேதி, சி.ஐ.டி., - எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் ஹூப்பள்ளி சென்று விசாரித்தனர்.நேற்று சி.பி.ஐ., - ஏ.டி.ஜி.பி., பி.கே.சிங் என்கவுன்டர் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். விசாரணை குறித்த தகவல்களை சி.ஐ.டி., - எஸ்.பி., வெங்கடேஷ், ஏ.சி.பி., சிவபிரகாஷ் நாயக்கிடம் இருந்து கேட்டறிந்தார்.அப்போது, என்கவுன்டர் குறித்த விசாரணை, இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ