சினிகடலை
மேகா ஷெட்டிக்கு
அடுத்தடுத்து வாய்ப்பு
நடிகர் வினய் ராஜ்குமார் மற்றும் நடிகை மேகா ஷெட்டி நடிக்கும், 'கிராமயணா' திரைப்படத்தின் ஒரு பாடல், லஹரி மியூசிக் சேனலில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது, சிவராஜ்குமார், சுதாராணி நடித்திருந்த, 'மன மெச்சித ஹுடுகி' திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடலின் ரீ மேக்காகும். இப்பாடலை கபில் கபிலன், ஐரா உடுபா பாடியுள்ளனர். பூர்ண சந்திர தேஜஸ்வி இசை அமைத்துள்ளார். சின்னத்திரை தொடர் மூலமாக, பிரபலடைந்த மேகா ஷெட்டி, அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார். தற்போது இவரது நடிப்பில், 'கைவா, ஆப்பரேஷன் லண்டன் கபே' போன்ற படங்கள், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. 'கிராமாயணா' விலும் நாயகியாக நடித்துள்ளார்.
முத்தக்காட்சியில் நடிப்பதில்லை
நடிகை மலைகா வசுபால், திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்தில், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றவர். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடிக்கிறார். 'வித்யாவதி, உபாத்யாக்ஷா' திரைப்படங்களில், அவரது நடிப்பு பேசப்பட்டது. வரும் வாய்ப்புகள் அனைத்தையும், அவர் ஒப்புக்கொள்வதில்லை. தனக்கு பொருத்தமான, மக்கள் மனதில் இடம் பிடிக்கும் கதை, கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தொழிலில் சில கட்டுப்பாடுகள் வைத்துள்ளார். எந்தக் காரணத்தை கொண்டும், முத்தக்காட்சியில் நடிக்க சம்மதிப்பது இல்லை. கதாபாத்திரத்துக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே, கவர்ச்சியாக நடிக்கிறார்.