உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு வடக்கு பல்கலையின் துணைவேந்தர் பதவிக்கு போட்டி

 பெங்களூரு வடக்கு பல்கலையின் துணைவேந்தர் பதவிக்கு போட்டி

கோலார்: பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, 70 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சிலர் மத்திய மாநில அரசுகள், கவர்னர் சிபாரிசுடன் காத்திருப்பதாக தெரிகிறது. பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகம், 2017ல் கோலாரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது, பேராசிரியர் கெம்பராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அடுத்து நிரஞ்சன் வனவள்ளி துணைவேந்தராக பதவி வகித்தார். இவரது பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியோடு முடிந்தது. தற்போது, கோலாரின் மங்கசந்திராவில் உள்ள முதுகலை கல்வி மைய இயக்குனர் பேராசிரியர் டி.குமுதா தற்காலிக துணைவேந்தராக இருந்து வருகிறார். அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கர்நாடக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்தது. துணைவேந்தர் தேர்வு குழுவுக்கு நான்கு கல்வியாளர்களையும் நியமித்தது. இந்தக்குழு, விண்ணப்பித்தவர்களில் மூன்று பேரை தேர்வு செய்து, கவர்னருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை, துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார். துணைவேந்தர் பதவி காலம், 4 ஆண்டுகள். வயது வரம்பு, 67. இதில் எது முன்னதாக வருகிறதோ அது நடைமுறைக்கு வரும். பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். இப்பதவிக்கு, 70 பேர் விண்ணப்பித்துள்ளனர். பதவியை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் கவர்னரின் சிபாரிசுடன் சிலர் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை