உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்., அரசு கவிழாது: குமாரசாமி பதில்

 காங்., அரசு கவிழாது: குமாரசாமி பதில்

கோலார்: ''எனக்கு தெரிந்த வரை, காங்கிரஸ் அரசு அவ்வளவு எளிதில் கவிழாது. இது போன்ற பிரம்மையில் நான் இல்லை,'' என மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் நாற்காலிக்காக, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் முட்டி மோதுகின்றனர். ஆனால் அரசு கவிழும் என, எனக்கு தோன்றவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை, இப்போதே கணிக்க முடியாது. இது போன்ற பிரம்மையிலும் நான் இல்லை. இன்றைய அரசியலை புரிந்து கொள்வது கஷ்டம். இன்றைய சூழ்நிலையை கவனித்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே ம.ஜ.த., தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்படும்படி உத்தரவிட்டுள்ளேன். நான் பகல் கனவு காணவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பில், எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவையும் சுருட்ட வேண்டும் என்பது, காங்கிரசாரின் எண்ணமாகும். அரசை தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பர். காங்கிரசின் ஒக்கலிக எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று என்ன சாதித்தனர். மாநிலத்தின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும், முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். ஏழு கோடி மக்களின் நலனுக்காக, அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை