ஒப்பந்ததாரர்களுக்கு காங்., தொல்லை: ம.ஜ.த., புகார்
பெங்களூரு: 'பீஹார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் அரசு ஒப்பந்ததாரரிடம் பணம் வசூலிக்கிறது' என, ம.ஜ.த., குற்றஞ்சாட்டியுள்ளது.இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் ம.ஜ.த.,வின் நேற்றைய பதிவு:காங்கிரஸ் அரசு, ஒப்பந்ததாரர்களுக்கு தொல்லை தருகிறது. வரும் நாட்களில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலுக்கு, கர்நாடகாவில் காங்., அரசு நிதி வசூலிக்க துவங்கியுள்ளது.கர்நாடகாவை ஏ.டி.எம்., கார்டு போன்று, அக்கட்சி பயன்படுத்துகிறது. கட்சி மேலிடத்தலைவர்களிடம், தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் 'நான், நீ' என போட்டி போடுகின்றனர்.மாநில ஒப்பந்ததாரர்களை மிரட்டி, நெருக்கடி கொடுத்து 60 சதவீதம் கமிஷன் வசூலிக்கின்றனர். அமைச்சர்களுக்கு துறை வாரியாக டார்க்கெட் நிர்ணயித்துள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்க கமிஷன் பெறுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.