உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ.,வில் நீக்கப்பட்ட எத்னாலுக்கு காங்., - எம்.எல்.ஏ., அழைப்பு

பா.ஜ.,வில் நீக்கப்பட்ட எத்னாலுக்கு காங்., - எம்.எல்.ஏ., அழைப்பு

ஹூப்பள்ளி : ''பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எத்னால் விருப்பப்பட்டால் காங்கிரசில் இணையலாம். அவரை காங்கிரஸ் வரவேற்கிறது,'' என, காங்., - எம்.எல்.ஏ., ராஜு காகே கூறி உள்ளார்.ஹூப்பள்ளியில் நேற்று காக்வாட் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ராஜு காகே அளித்த பேட்டி:பா.ஜ.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் விருப்பப்பட்டால் காங்கிரசில் இணையலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். அவருக்கு எந்த நிபந்தனையும் இல்லை.உயர்மட்ட குழுவுடன் கலந்துரையாடிய பின், எத்னாலை காங்கிரசிற்கு வரவேற்போம். எத்னாலை காங்கிரசிற்கு அழைத்து வருவதற்கு எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டால், நானே அவரை கட்சிக்கு அழைத்து வருவேன்.மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு புதிய பஸ் நிலையங்களை கட்டி வருகிறது. புதிய பஸ்களை தொடர்ந்து வாங்கி வருகிறது.ஒரு அரசில் தடைகள் வருவது சாதாரணம். சித்தராமையா அரசை மிகவும் வெளிப்படையாக நடத்தி வருகிறார். 'ஹனி டிராப்' என்பது தனிப்பட்ட மனிதர்களின் விஷயம். இது அரசு திட்டம் இல்லை. ஹனி டிராப் குறித்து ராஜண்ணாவின் பெயரை சபையில் முதலில் சொன்னது எத்னால்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை